¡Sorpréndeme!

'Rajini-யிடம் ஆதரவு கோரப்போவதில்லை' - Sarathkumar | Oneindia Tamil

2021-01-19 830 Dailymotion

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், “சமத்துவ மக்கள் கட்சியின் கொடியை போல சில கட்சிகள், கட்சி கொடிகள், கரை வேட்டி வைத்திருந்ததால் புதிய கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதிமுக கூட்டணி தொடரும். முதல்வர் பேச அழைக்கும் போது எங்கள் கோரிக்கையை முன்வைப்போம். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும். கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும். அரசியலுக்கு வரவில்லை எனக்கூறிய ரஜினிகாந்திடம் ஆதரவு கோரப்போவதில்லை” என்றார்.

samathuva makkal katchi Sarathkumar press meet

#Sarathkumar
#TamilnaduAssemblyElection